- விஜய்
- எடப்பாடி
- கே.பி.முனுசாமி
- அமைச்சர்
- நிர்மல் குமார்
- ஓசூர்
- கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்
- அஇஅதிமுக
- பிரதி பொது செயலாளர்
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- முதல் அமைச்சர்
- விஜய்…
ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் திறப்பு விழா இன்று ஓசூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, முதல்வர் விஜய் சந்திக்க நேரம் கேட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தது தவறாகும். சந்திப்பு தொடர்பாக விஜய், எடப்பாடி பழனிசாமியையோ, அவரது அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளவில்லை. மேலும், வேறு அதிமுக தலைவர்களிடம் கேட்டதாகவும், அதற்கு அவர்கள் ‘இப்போது வேண்டாமென கூறியதாகவும்’ தெரிவித்ததில் உண்மை இல்லை. எந்த சூழலிலும் விஜய், அவருடைய அலுவலகத்திலிருந்து எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்கவில்லை.
தமிழக முதல்வர் ‘ரீல்ஸ்’ விட்டு, இன்ஸ்டாகிராமில் சினிமா போல உணர்ச்சிகளை தூண்டி இளைஞர்களை தன் பக்கம் இழுத்துள்ளார். மாயத்தோற்றத்தை உருவாக்கி, குழந்தைகள், தங்கள் பெற்றோரை விஜய்க்கு வாக்களிக்க வேண்டுமென வற்புறுத்தியதால் வெற்றி பெற்றுள்ளார். விஜய் வெற்றி, இந்த சமூகத்திற்கு செய்த தியாகத்திற்கோ, உழைப்பிற்கோ கிடைத்ததல்ல, குறிப்பிட்ட சதவீத மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர். விஜய் பார்த்து படிப்பவர், அவரிடம் சரக்கு இல்லை. அதிமுக 31 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதாவை விமர்சிக்காதவர் பெரும்பான்மை இல்லை என்றால் விஜய் யாரை சந்தித்திருக்க வேண்டும்?
நிர்மல்குமாரை விட ஆதவ் சந்தர்ப்பவாதி. அதிகாரம் உள்ள இடத்திற்கு சென்றுவிடுவார். சினிமா பாணியில் பேசுவதால் முன்னாடி உள்ளவர்கள் கை தட்டலாம், முகம் சுழிப்பவர்கள் எத்தனை பேர் என்பதை உணர வேண்டும், உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் மாநில முதல்வர். தவெகவிற்கு கட்சி அமைப்பே இல்லை. அதிமுகவுக்கு குக்கிராமங்களில் கிளை உள்ளது. இடைத்தேர்தல் வரட்டும், எப்படி இருக்கும் என பாருங்கள். எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்தை ஜெயலலிதா காப்பாற்றினார். அவர் வழியில் எடப்பாடி பழனிசாமி உழைக்கிறார். போதை பொருட்கள் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் கொலை உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
