சேலம்: சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் ஏட்டுவின் கணவர் பெருமாள். இவர் பைனான்சியராக உள்ளார். இவரது பிறந்த நாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக அவருக்கு ‘சர்ப்ரைஸ்’ தரும் வகையில் மனைவி ஏட்டு, ஒரு ரகசிய நிகழ்ச்சியை நடத்தி காட்டினார். அதில், பெருமாளிடம் சில வாலிபர்கள் தகராறு செய்வது போன்ற ஒரு காட்சி வருகிறது. அதை ஒருவர் வீடியோ எடுக்கிறார். அதை தெரிந்து கொண்டு பெருமாள் சிரிக்கிறார். இதை தொடர்ந்து அங்குள்ள இளைஞர்கள், பெருமாளுக்கு ரோஜா பூவை வழங்கி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.
இதையடுத்து அவர் திறந்த வெளியில் கேக் வெட்டினார். இதனை பகிர்ந்து கொண்டதுடன், பைனான்சியர் ஒரு லைட்டான குத்தாட்டத்தை ஆடினார். அந்நேரத்தில் எதிர்பாராத வகையில் ஏட்டம்மா, அன்பு கணவனுக்காக 15 பவுனில் செய்யப்பட்ட பிரமாண்டமான தங்க நகையை கணவருக்கு மாலையாக அணிவித்தார். இந்த திடீர் ‘சர்ப்பிரைசால்’ மகிழ்ச்சியடைந்த பைனான்சியர் பெருமாள், ஏட்டம்மாவை கட்டி முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
