சட்டவிரோதமாக தங்கி இருந்து அமெரிக்காவில் லாரி டிரைவராக பணியாற்றிய 30 இந்தியர்கள் கைது

நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்து லாரி ஓட்டுனர்களாக வேலை செய்து வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் அரிசோனாவின் யூமா பிரிவைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு முகவர்கள் ஆபரேஷன் செக்மேட் எனும் நடவடிக்கையின் கீழ் அமெரிக்காவில் வணிக வாகனங்களை இயக்கும் சட்டவிரோத நபர்களை கண்டறிந்து கைது செய்தனர். இதில் மொத்தம் 52 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 36 பேர் கனரக லாரிகளை ஓட்டி வந்ததும் கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட 36 சட்டவிரோத லாரி ஓட்டுனர்களில் 30 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.

ஆறு பேர் மெக்சிகோ, எல் சால்வடார் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்.இவர்கள் அனைவரும் கலிபோர்னியா, நியூயார்க், வாஷிங்டன் மற்றும் வர்ஜீனியா போன்ற மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட வணிக ஓட்டுனர் உரிமங்களை வைத்திருந்தனர். அதேநேரத்தில் சிலரிடம் எந்தவிதமான ஓட்டுனர் உரிமமும் இருக்கவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாக காலத்தில் பெறப்பட்ட அங்கீகார ஆவணங்களை வைத்திருந்தனர். எனினும் அவை காலாவதியாகி செல்லாத நிலையில் இருந்தன. கைது செய்யப்பட்ட அனைவரும் உரிய நடைமுறைகளுக்கு உட்படுத்தனர். இந்தியாவை சேர்ந்த 30 ஓட்டுனர்களும் விரைவில் நாடு கடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: