×

சென்னையில் கொல்லப்பட்ட இளம்​பெண் உடல் விழுப்புரத்தில் அடக்கம்

 

விழுப்புரம்: சென்னை, கோயம்பேட்டில் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட இலங்கை இளம்பெண்ணின் உடல் அவர் வசிக்கும் கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. சென்னை கோயம்​பேட்​டில் நட்​சத்​திர ஓட்​டல் உள்​ளது. அதன் உள்​புறம் உள்ள மதுபாரில் கடந்த 30ம்தேதி இரவு 11 மணி​யள​வில் இருதரப்​பினர் மது அருந்​தியபோது, அவர்​களுக்​குள் நடன​மாடு​வ​தில் தகராறு ஏற்​பட்​டது. அங்​கிருந்த பவுன்​சர்​கள் இரு தரப்​பினரை​யும் உடனடி​யாக வெளி​யேற்​றினர். கோயம்​பேடு பாலத்​துக்கு கீழே பைக்கில் முன்னால் சென்ற ஒரு தரப்பினர் மீது பின்னால் காரில் சென்ற மற்றொரு தரப்பினர் மோதினர்.

இதில், இரு சக்கர வாக​னத்தை ஓட்​டிச் சென்ற விழுப்​புரம் மாவட்​டம் கீழ்புத்துப்பட்டு அருகே உள்ள இலங்கைத் தமிழர்​ மறு​வாழ்வு முகாம் பகுதியை சேர்ந்த யான்சி (19) என்ற இளம்​பெண் தூக்கி வீசப்​பட்டு சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார். பின்​னால், அமர்ந்​திருந்த 17 வயது சிறுமிக்​கும் படுகாயம் ஏற்​பட்​டது. இதுகுறித்து போலீசார் வழக்​குப்பதிவு செய்து இதில் தொடர்புடைய பாலகுரு, ேஜாஷ்வா, கிஷோர்குமார், சக்திவேல், விமல், கோமகன், ராகுல் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கொல்லப்பட்ட யான்சியின் உடல், பிரேத பரிசோதனைக்குப் பிறகு விழுப்​புரம் மாவட்​டம் கீழ்புத்துப்பட்டு அருகே உள்ள இலங்கைத் தமிழர்​ மறு​வாழ்வு முகாம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு யான்சியின் உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து நேற்று மாலை யான்சியின் உடல் கீழ்புத்துப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

Tags : Chennai ,Villupuram ,Koyambedu, Chennai ,Kilputtuppet ,Kottakuppam ,Natsattira ,
× RELATED வங்கி மோசடி எனக் கூறி தலைமைச் செயலகம்...