×

மகாராஷ்டிராவில் விஷச்சாராயம் குடித்து 14 பேர் பலி

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் பிம்ப்ரி சிஞ்ச்வாட்டில் விஷச்சாராயம் குடித்து நேற்று 13 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிம்ப்ரி சிஞ்வாட்டில் உள்ள புகேவாடியில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் பட்நவிஸ், பிம்ப்ரி, சிஞ்ச்வாட்டில் 9 பேர் இறந்திருப்பதாகவும் கள்ளச் சாராயம் குடித்து இந்த மரணங்கள் சம்பவித்திருக்கலாம் என்று கருதப்படுவாகவும் கூறினார்.

இது தொர்பாக கள்ளச்சாராயம் சப்ளை செய்யும் ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். புனே ஹடாப்சரிலும் விஷச்சாராயம் குடித்து 5 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இதனிடையே சரத் பவார் கட்சி எம்.எல்.ஏ. ரோகித் பவாரும், கட்சி ஆதரவாளர்களும் ஹடாப்சரில் கள்ளச்சாராயம் காய்ச்சும் இடத்தை அடித்து நொறுக்கினர்.

Tags : Maharashtra ,Pune ,Pimpri Chinchwad ,Phukewadi ,
× RELATED பாஜகவை வீழ்த்த புதிய வியூகம்; ஜூன் 6ல்...