×

சிறுமிக்கு பாலியல் தொல்லை தவெக பிரமுகர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (42). இவர் காஸ் ஸ்டவ் சரி செய்யும் தொழிலாளி. தவெக உறுப்பினர். இவர் நேற்று முன்தினம் 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் கொலை மிரட்டல் விடுத்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி உள்ளார். இதனையடுத்து அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற சிறுமி தாயாரிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நேற்று சிலம்பரசனை கைது செய்தனர். பின்னர் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். சிலம்பரசன் தவெகவில் நிர்வாகி பொறுப்பு கேட்கும் நிலையில் தற்போது வழக்கில் மாட்டிக்கொண்டதால், பணம் வாங்கிக் கொண்டு இவரிடம் பேரம் பேசி கட்சியில் இல்லாதவாறு வழக்குப்பதிந்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Daveka Pramukh ,Mayiladuthura ,Chilambarasan ,Tueka ,
× RELATED மாமல்லபுரம் அருகே மனைவியை கத்தியால்...