×

பூட்டியே கிடக்கும் விஏஓ அலுவலகம்

 

தேன்கனிக்கோட்டை, மே 28: அஞ்செட்டியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கடந்த 20 நாட்களாக பூட்டியே கிடப்பதால், சான்றிதழ்களை பெற முடியாமல் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். அஞ்செட்டி கிராம நிர்வாக அலுவலராக (மேற்கு) ஜார்ஜ் என்பவர் உள்ளார். கடந்த 20 நாட்களாக அவர் அலுவலகத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தேவையான சான்றிதழ்கள் பெறவும், வாரிசு சான்றிதழ், இறப்பு, பிறப்பு சான்றிதழ் பெறவும், சொட்டுநீர் பாசன மானியத்திற்கு அடங்கல் பெற, நிலம் அளவை செய்ய என கடந்த 20 நாட்களாக அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

அதேபோல் பள்ளி மாணவர்கள் வருமான சான்றிதழ், முதல்பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலத்திற்கு வந்து ஏமாற்றமடைந்து செல்கின்றனர். தொடர்ந்து, 20 நாட்களாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் பூட்டி கிடப்பதால், பொதுமக்கள் சான்றிதழ்கள் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். அஞ்செட்டி தாசில்தாரிடம் பொதுக்கள் புகார் தெரிவித்தும் மாற்று ஏற்பாடு செய்யாமல் உள்ளார். இதே நிலை நீடித்தால், வரும் திங்கட்கிழமை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள், விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags : VAO ,Thenkani Kottai ,Village Administrative Officer ,Anchetty ,Village ,Administrative Officer ,George ,
× RELATED டூவீலரில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்தவர் கைது