×

உலகெங்கும் அன்பு, அமைதி தழைத்தோங்கி ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்திட உறுதியேற்போம் – டிடிவி தினகரன் பக்ரீத் வாழ்த்து

சென்னை: பக்ரீத் திருநாளையொட்டி அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் வாழ்த்து செய்தி வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளான பக்ரீத் திருநாளை கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.

இறைவனின் விருப்பத்தையே தனது விருப்பமாகக் கருதி, தன் வாழ்நாள் முழுவதும் தியாகத்திற்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் சிறந்த அடையாளமாகத் திகழ்ந்ததோடு, இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து தன் மகனையும் தியாகம் செய்ய முன்வந்த இறைத்தூதர் இப்ராகிம் அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை நாம் அனைவரும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.

இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில் உலகெங்கும் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிடச் சகோதரத்துவத்துடன் கூடிய ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம் என்றும் டிடிவி தினகரன், தனது பக்ரீத் திருநாள் வாழ்த்தில் கூறி இருக்கிறார்.

Tags : TTV ,Dinakaran ,Bakrid ,Chennai ,AMMK ,TTV Dinakaran ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 66 வது பழக் கண்காட்சி இன்று தொடங்கியது..!!