×

அரசு மருத்துவமனையில் இறந்தவர் உடலை எலி கடித்துக்குதறியதால் உறவினர்கள் அதிர்ச்சி!

திருவாரூர்: திருவாரூரை சேர்ந்த கோவிந்தராஜ்(55) என்பவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் மருத்துவமனை விதிப்படி அவரது உடல் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. மருத்துவமனை நடைமுறைகளை முடித்துவிட்டு இன்று உடலை பெற இறந்தவரின் உறவினர்கள் பிணவறைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் இறந்த கோவிந்தராஜின் உடலை எலி கடித்துக்குதறியதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

பிணவறையில் வைக்கப்பட்டிருந்த கோவிந்தராஜ் என்பவரின் உடலில் பல இடங்களில் எலி கடித்துக்குதறிய அடையாளம் இருந்ததாகவும், அவருடைய எலும்புகள் வெளியே தெரியும் வகையில் இருந்ததாகவும். முகம் தலை ஆகிய இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று அவரின் உறவினர்கள் புகாரளித்துள்ளனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள் முறையாக விளக்கம் அளிக்கவில்லை.

எனவே இறந்தவரின் உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல்வர், நிர்வாகிகள் மற்றும் போலீசார் உறவினர்களிடையே சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Thiruvarur ,Govindaraj ,
× RELATED தேர்தல் வாக்குறுதி படி கடனை அரசு...