×

பழநி கோயிலில் இளம் தம்பதி ரொமான்ஸ் ரீல்ஸ்

 

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு செல்வதற்கு வின்ச், ரோப்கார் மற்றும் படிப்பாதைகளை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கோயிலின் படிப்பாதையில் இளம் மனைவியை, அவரது கணவர் தூக்கிச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வரும் காட்சி வேண்டுதலுக்காக தூக்கி வருவது போல் இல்லை. அப்பெண் நடக்க முடியாதவர் போன்றும் இல்லை. ஏனெனில் இறக்கி விட்ட பின்னர், அந்த பெண் இயல்பாக நடந்து செல்கிறார்.

இத்தம்பதிக்கு நெட்டிசன்கள் பலர் வாழ்த்து தெரிவித்தாலும், புனிதமாக கருதப்படும் தலத்தில் இளம்தம்பதியின் அத்துமீறிய ரொமான்ஸ் வீடியோ பக்தர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட ஜோடி மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகத்துக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Palani ,Thandayutapani Swamy hill temple ,Palani, Dindigul district ,
× RELATED சேலம் அருகே தனியார் பள்ளியில்...