- சூப்பர் செஸ் கிளாசிக்ஸ்
- பிரக்ஞானந்தா
- புக்கரெஸ்ட்
- கிராண்ட் மாஸ்டர்
- டெய்க் போக்டன் டேனியல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புக்காரெஸ்ட், ருமேனியா…
புகாரெஸ்ட்: சூப்பர் செஸ் கிளாஸிக்ஸ் போட்டியில், ரொமேனியா கிராண்ட் மாஸ்டர் டீக் போக்டன் டேனியல், தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா இடையிலான 6வது சுற்று டிராவில் முடிந்தது. சூப்பர் செஸ் கிளாசிக்ஸ் போட்டிகள், ரொமேனியாவின் புகாரெஸ்ட் நகரில் நடந்து வருகின்றன. இப்போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உட்பட 10 வீரர்கள் ஆடி வருகின்றனர். 6வது சுற்றுப் போட்டியில், பிரக்ஞானந்தா, ரொமேனியா கிராண்ட் மாஸ்டர் டீக் போக்டன் டேனியல் மோதினர்.
விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் இருவரும் சமபலத்துடன் காய்களை நகர்த்தினர். ஒரு கட்டத்தில் யாரும் வெல்ல முடியாது என்ற சூழலில் இருவரும் டிரா செய்ய ஒப்புக்கொண்டனர். 6 சுற்றுகள் முடிவில் ஜெர்மனி கிராண்ட் மாஸ்டர் வின்சென்ட் கீமர், 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பேபியானோ கரவுனா, உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சிண்டாரோ, நெதர்லாந்து கிராண்ட் மாஸ்டர் ஜோர்டென் வான் ஃபாரீஸ்ட், அனிஷ் கிரி தலா 3.5 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.
