×

சென்னை இராயப்பேட்டையில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் ப.ராஜ்குமார்

சென்னை: வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் இன்று (21.5.2026) சென்னை இராயப்பேட்டையில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் சென்னை இராயப்பேட்டையில் 3.84 ஏக்கர் பரப்பளவில் 17 அடுக்குமாடி கொண்ட 8,10,700 ச.அடியில் ரூ.540.52 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகின்றது. இக்கட்டுமான பணி உரிய காலத்தில் முடிக்க வேண்டும் என பொறியளார்களிடம் அமைச்சர் ப.ராஜ்குமார் வலியுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் டாக்டர் இரா.செல்வராஜ் இ.ஆ.ப., வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு.பிரபாகர் இ.ஆ.ப., மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Minister ,P. Rajkumar ,Chennai ,Housing and Urban Development ,Housing Facilitation Board ,Irayappetta, Chennai ,Tamil Nadu Housing Board of Chennai ,Irayappetta ,
× RELATED குஞ்சாலுவிளை முந்திரி தொழிற்சாலையில்...