×

மும்பையில் ‘வடபாவ்’ விலை உயர்வு: வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி

மும்பை: மும்பையில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட மதிய உணவாகவும், மாலை நேர சிற்றுண்டி வடபாவ், மிசல்பாவ் மற்றும் பாவ்பாஜி. இந்த உணவுகளுக்கு மிக முக்கிய மூலப்பொருள் ‘பாவ் ஆகும். இந்நிலையில், மும்பை முழுவதும் உள்ள பேக்கரிகள் பாவ் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன. இதுவரை 12 பாவ் கொண்ட ஒரு அடுக்கு (லாதி), தற்போது ரூ.10 அதிகரித்து விற்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ஒரு தனி பாவ் ரூ.3-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் விலை ரூ.4 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பேக்கரி உரிமையாளர்கள் கூறுகையில், ‘மூலப்பொருட்கள் விலை உயர்வு, போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பால் பாவ் தயாரிக்கும் பேக்கரிகள் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி இருக்கிறோம். இந்த விலையை உயர்த்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்றனர். மறுபுறம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வால் ஏற்கனவே திணறி வரும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மாத பட்ஜெட்டை இந்த விலை உயர்வு மேலும் பதம் பார்க்க தொடங்கியுள்ளது.

பால் விலை உயர்ந்துள்ளதால் சாலையோர கடைகள் மற்றும் துரித உணவகங்களில் வடபாவ் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சமீபத்தில்தான் பால் விலை உயர்ந்தது. மேலும் ரொட்டி (பிரட்) விலை பாக்கெட்டுக்கு ரூ.5 வரை அதிகரித்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள், தற்போது ‘வடபாவ்’ விலையும் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது மக்களை அதிர்ச்சிக்குள் ஆளாக்கியுள்ளது.

Tags : Mumbai ,
× RELATED ஏர் இந்தியா விமானம் பெங்களூரு விமான...