சென்னை: முதல்வர் விஜய் காலையில் தலைமை செயலகம் வந்துவிடுவதால், அரசு ஊழியர்களும் 10 மணிக்குள் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் 40க்கும் மேற்பட்ட துறைகளில் சுமார் 5,500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். முதல்வர் விஜய் காலையிலேயே வந்துவிடுவதால், அனைத்து ஊழியர்களும் காலை 10 மணிக்குள் தங்களின் இருக்கைக்கு வருவதை அதிகாரிகள் தற்போது கட்டாயமாக்கி உள்ளனர்.
தலைமை செயலக பணியாளர்கள் அனைவருக்கும் காலை 10 மணிக்குள் பணிக்கு வந்துவிட வேண்டும். பணி நேரம் மாலை 5.45 மணிக்கு நிறைவடையும். அதிகபட்சமாக காலை 10.10 மணி வரை மட்டுமே தாமதமாக வர அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு மேல் தாமதித்தால், வருகை பதிவேடு மூடப்பட்டு ஆப்சென்ட் அல்லது விடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் அனைத்து துறை ஊழியர்களுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
