×

காங்கோவில் 3 எபோலா சிகிச்சை மையங்கள் திறப்பு

 

டக்கர்: காங்காவில் எபோலா வைரஸ் பரவி வருகின்றது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்டோர் எபோலா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகின்றது. மேலும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் இட்டூரியை மையமாக கொண்டுள்ளது. எனினும் கின்ஷாசாவிலும், மிகப்பெரிய நகரமான கோமாவிலும் நோய்த்தொற்று பதிவாகி உள்ளது.

இந்நிலையில் காங்கோவில் சுகாதாரத்துறை அமைச்சர் சாமுவேல் ரோஜர் கம்பா கூறுகையில், ‘‘நோயாளிகளின் எண்ணிக்கை காரணமாக மருத்துவமனைகள் அழுத்தத்தில் உள்ளன. இட்டூரி, கின்ஷாசா, கோமாவில் எபோலா சிகிச்சை மையங்கள் திறக்கப்படும்” என்றார்.

Tags : Congo ,Dakar ,outbreak ,Ituri ,Kinshasa ,
× RELATED அமெரிக்காவில் சாண்டியா கோவில் மசூதி அருகே துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி