மும்பை: நீட் வினாத்தாள் விற்பனை தொடர்பாக மராட்டியத்தைச் சேர்ந்த பிரபல நீட் பயிற்சி மைய உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சிவராஜை அழைத்து விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அவரது பயிற்சி மையத்தில் சோதனை நடத்தினர். நீட் மோசடி வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைதான நிலையில் 10வது நபராக நீட் பயிற்சி மைய உரிமையாளர் கைதாகியுள்ளார்.
