×

சமூக ஊடக உடற்பயிற்சி கலாச்சாரம்: இளைஞர்களுக்கு இதயம் செயலிழக்கும் அபாயம்

இந்திய நகர்ப்புற இளைஞர்களிடையே விரைவாக கட்டுமஸ்தான தேகத்தை வளர்க்கும் மோகம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜிம் ஸ்டீராய்டுகள் வீரியமிக்க ஃப்ரீ வொர்க் அவுட் தூண்டல் பொடிகள் மற்றும் கட்டுப்பாடு இல்லாத ஜிம் சப்ளிமெண்ட்களின் பயன்பாடு ஆபத்தான முறையில் அதிகரித்துள்ளதாக இதயநோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சமூக ஊடகங்களில் வரும் ஃபிட்னஸ் காணொளிகள் மற்றும் இன்புளுவன்சர்களின் விளம்பரங்களை நம்பி பல இளைஞர்கள் இந்த ஆபத்தான தயாரிப்புகளை பயன்படுத்துகின்றனர்.

இதனால் முற்றிலும் ஆரோக்கியமாக தோன்றும் இளைஞர்களுக்கு கூட மாரடைப்பு இதய செயலிழப்பு மற்றும் திடீர் மரணங்கள் ஏற்படுவதாக எய்ம்ஸ் மருத்துவர் மயங்க யாதவ் தெரிவித்துள்ளார். முறையான இதய பரிசோதனை இன்றி தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது தற்கொலைக்கு சமம் என்று கூறும் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராகுல் சந்தோலா, சாதாரண இரத்த பரிசோதனை அல்லது ஈ.சி.ஜி .மூலமாக இதயத்தில் உள்ள மறைமுக பாதிப்புகளை கண்டறிய முடியாது என்றும் இதற்காக மேம்பட்ட ஏஐ தொழில்நுட்ப பரிசோதனைகள் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். சமூக ஊடக அங்கீகாரத்துக்காக ஆரோக்கியத்தை பனையமைக்க வேண்டாம் என்றும் இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கேரள முதல்வராக வி.டி. சதீசன் பதவியேற்றார்