×

பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் நீண்ட காலமாக பூட்டிக் கிடக்கும் குடிநீர் நிலையம்: பயணிகள் அவதி

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் அடங்கிய பெரியபாளையம் ஊராட்சியில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பெரியபாளையத்தின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு மாநகர மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சென்று வருகின்றனர். குறிப்பாக, பெரியபாளையத்தில் பிரசித்தி பெற்ற பவானியம்மன் கோயிலுக்கு கோடை காலத்தில் வரும் பக்தர்கள், இங்குள்ள பேருந்து நிலையத்தில் தாகத்துக்கு குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலன் கருதி, பெரியபாளையம் பேருந்து நிலையத்தின் அருகில் கடந்த 2019ம் ஆண்டு, அப்போதைய எம்எல்ஏவின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6.50 லட்சம் மதிப்பில் புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல், எவ்வித பயன்பாடும் இன்றி பூட்டியே கிடக்கிறது.
எனவே, பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் நீண்ட காலமாக பூட்டியே கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, தற்போதைய கோடை காலத்தில் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Periypalayam ,Uthukottai ,Yellapuram ,Thiruvallur district ,Chennai ,Thiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,
× RELATED சென்னை, தருமபுரி உள்ளிட்ட 20...