- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அரசு அலுவலக உதவியாளர்
- அத்தியாவசிய ஊழியர்கள் மாநில மத்திய சங்கம்
- அனைத்து இந்தியாவும்
- ஜனாதிபதி
- கே. கணேசன்
- நிலை
- எஸ். மதுரம்
சென்னை: தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மைய சங்கத்தின் அகில இந்திய தலைவர் கே.கணேசன், மாநில தலைவர் எஸ்.மதுரம் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் விலைவாசியை கருத்தில் கொண்டு ஏற்கனவே வழங்கப்பட்ட அகவிலைப்படி 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீகிதமாக உயர்த்தி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஜனவரி மாதம் முதல் முன் தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படையாளர்கள் சுமார் 2,44,000 பேர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், தமிழக முதல்வர் தேர்தல் அறிவிப்பாக, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு கிடைக்க செய்வோம். தினக்கூலி பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு நடைமுறைகைளை கொண்டு வந்து அரசாணைகள் வெளியிட்டு இருக்கிறீர்கள். அதுபோல அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்களுக்கு நிறைவேற்றப்படாமல் உள்ள கோரிக்கைகள் மீது செவி சாய்த்து நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
