சென்னை: மக்கள் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுகிறது ஒன்றிய பாஜக அரசு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ‘ஏற்கெனவே வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டது. இந்நிலையில், இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகப் போகிறது. இதில் இருந்து மக்களை எப்படிக் காக்கப் போகிறது ஒன்றிய அரசு?’ எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
