×

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை ஆலியா பட் குறித்து நெட்டிசன்கள் கேலி: பிரபல நடிகர் அலி கோனி ஆவேச பதிலடி

மும்பை: உலக புகழ்பெற்ற 79வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பாலிவுட் நடிகை ஆலியா பட் 2வது முறையாக, கலந்து கொண்டிருக்கிறார். அவர் பிராண்ட் அம்பாசிடராக ஒப்பந்தம் செய்திருக்கும் ஒரு பிராண்டின் விளம்பரத்திற்காக கடந்தாண்டு திரைப்பட விழாவில் கலந்துகொண்டிருந்தார். அந்த ஒப்பந்தம் இந்தாண்டும் தொடர்வதால், தற்போதும் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் ஆலியா பட் அணிந்து சென்றிருந்த பிங்க் நிற ஆடை இணையத்தில் பயங்கர வைரலாகியது. அந்த உடை மட்டுமல்ல, ஆலியா பட் விழாவில் ரெட் கார்பெட்டில் நடந்து செல்லும் காணொளி ஒன்றும் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் ஆலியா பட், ரெட் கார்ப்பெட்டில் நடந்து வந்தார். ரெட் கார்பெட்டில் அவர் புகைப்பட கலைஞர்களுக்காகப் போஸ் கொடுத்தார். ஆனால், அங்கிருந்த புகைப்பட கலைஞர்கள் ஆலியா பட்டை கவனிக்காமல், வேறு நபர்களை புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக இருந்தனர். இப்படியான ஒரு விஷயம் நிகழ்ந்தவுடன் அங்கிருந்த மொபைல் போன் புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொடுத்து விட்டு கிளம்பினார்.

இந்நிலையில், இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்கள், “ஒரு சர்வதேச மேடையில் இவரை யாருக்கும் தெரியவில்லை என்பது மிகப்பெரிய அவமானம். புகைப்பட கலைஞர்கள் அவர்களுடைய சினிமாவை சேர்ந்த நட்சத்திரத்தை புகைப்படம் எடுப்பதில் சீரியஸாக இருந்திருக்கலாம்” என்றும் பதிவிட்டனர்.
இந்நிலையில் ஆலியா பட்டிற்கு ஆதரவாக நடிகர் அலி கோனி குரல் கொடுத்துள்ளார். அவர், ஆலியா பட்டின் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, எதிர்மறை எண்ணங்களை கண்டித்ததோடு, ஆலியாவின் கடின உழைப்பையும், கேன்ஸ் போன்ற ஒரு சர்வதேச மேடையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியதற்காகவும் பாராட்டினார்.

”இந்தியாவை உலக அரங்கில் நிலைநிறுத்த இவ்வளவு கடினமாக உழைத்த ஒருவரை, நம் சொந்த மக்களே வீழ்த்த முயற்சிப்பது வருத்தமளிக்கிறது. 2026 கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்தும் அதே வேளையில், பலர் கனவு காணும் ஒரு நிலையை அவர் அடைந்துள்ளார். கேலி செய்வதற்கும், இணையத்தில் வம்பு செய்வதற்கும் பதிலாக, சர்வதேச அளவில் இந்தியாவை பிரகாசிக்க செய்பவர்களை நாம் கொண்டாடவும் ஆதரிக்கவும் வேண்டும். நாம் நம்மை சேர்ந்தவர்களை உயர்த்தும்போதுதான் உயர்கிறோம், அவர்களை இழிவுபடுத்த முயற்சிக்கும்போது அல்ல’ என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

கேலி செய்வதற்கும், இணையத்தில் வம்பு செய்வதற்கும் பதிலாக, சர்வதேச அளவில் இந்தியாவை பிரகாசிக்க செய்பவர்களை நாம் கொண்டாடவும் ஆதரிக்கவும் வேண்டும். நாம் நம்மை சேர்ந்தவர்களை உயர்த்தும்போதுதான் உயர்கிறோம், அவர்களை இழிவுபடுத்த முயற்சிக்கும்போது அல்ல.

Tags : Alia Bhatt ,Cannes Film Festival ,Ali Koni ,79TH CANNES FILM FESTIVAL ,FRANCE ,Bollywood ,
× RELATED ஒடிசா, மிசோரம், சிக்கிம் உள்ளிட்ட 16...