×

ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கைடன்ஸ் தமிழ்நாடு (Guidance Tamilnadu) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்/தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து டாக்டர் தாரேஸ் அகமது ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் / தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக இருந்த குமார் ஜெயந்த் ஐ.ஏ.எஸ் தற்போது தமிழ்நாடு செய்திதாள் மற்றும் காகித நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் / தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக முதலமைச்சரின் செயலாளராக (III) இருந்த அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ் தற்போது கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சிறப்புச் செயலாளராக இருந்த மரியம் பல்லவி பல்தேவ் ஐ.ஏ.எஸ் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அதிகாரிகள் அயல் பணி அடிப்படையில் நியமிக்கப்படுவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், 21.02.1994 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் 167-ன் (பொது – சிறப்பு ஏ துறை) படி அமையும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu government ,Chennai ,Dr. ,Daresh Ahmed ,IAS ,Guidance Tamilnadu ,Health and Family Welfare Department ,Finance Department… ,
× RELATED நீட் தேர்வை முழுமையாக ரத்து...