×

கன்டெய்னர் லாரி மீது கார் மோதி இளம்நடிகர், ஒளிப்பதிவாளர் பலி: முதல் படம் வெளியான நிலையில் பரிதாபம்

திருமலை: கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் இளம் நடிகர், ஒளிப்பதிவாளர் இறந்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர்கள் பரத்காந்த், திரிலோக். இருவரும் சிறுவயது முதலே நண்பர்கள். திரைத்துறை மீதான ஆர்வத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத் சென்று நானக்ராம்குடாவில் வசித்து வந்தனர். மேலும் சினிமா துறையில் வாய்ப்புகளை தேடிவந்தனர். இதில் பரத்காந்த் தெலுங்கு மற்றும் இந்தி வெப் சீரியல்களில் நடித்து வந்தார். திரிலோக் பல தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

இந்நிலையில் பரத்காந்த் கதாநாயகனாக நடித்திருந்த ‘டெனென்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சந்தோஷத்தை தங்களது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதற்காக நடிகர் பரத்காந்த், ஒளிப்பதிவாளர் திரிலோக் இருவரும் சொந்த ஊரான நெல்லூருக்கு வந்தனர். பின்னர் இருவரும் நேற்றுமுன்தினம் இரவு ஐதராபாத்திற்கு காரில் புறப்பட்டனர்.

நேற்று அதிகாலை ஐதராபாத் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது இவர்களது கார் திடீரென மோதியது. இதில் கார் நொறுங்கியது. அதில் இருந்த நடிகர் பரத்காந்த், ஒளிப்பதிவாளர் திரிலோக் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஐதராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த 2பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Tirumala ,Bharatkanth ,Trilok ,Nellore, Andhra Pradesh ,Hyderabad ,Nanakramkudda… ,
× RELATED ஒர்க் ஃபிரம் ஹோம், ஆன்லைன் வகுப்புகள்...