ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா தேர் பவனி: திரளானோர் பங்கேற்பு

அஞ்சுகிராமம்: ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கடந்த 1ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 10 நாட்கள் நடந்தது. பத்தாம் திருவிழாவான நேற்று அதிகாலை 4 மணி திருப்பலி நடந்தது. புதிய குரு கன்சன் பிராங்கிளின் தலைமை வகித்து மறையுரை ஆற்றினார். காலை 5.30 மணிக்கு பெருவிழா திருப்பலியில் மறை மாவட்ட செயலர் மரிய கிளாட்ஸ்டன் தலைமையில், ராமன்புதூர் பீட்டர் ரெமிஜியுஸ் சிபிஎஸ்இ பள்ளி அருட்பணி ஸ்டீபன் கென்றி மறையுரை ஆற்றினார். விழாவை பங்கு மக்கள், பங்கு பேரவையினர் சிறப்பித்தனர்.

காலை 8.30 மணிக்கு மலையாள திருப்பலி சின்னத்துறை பங்குத்தந்தை ஜிபு தலைமையில் நடந்தது. காலை 10 மணி திருப்பலியில் வெள்ளமடம் பங்குத்தந்தை பேட்ரிக் சேவியர் தலைமையில், சுங்கான்கடை சேவியர் மருத்துவமனை அருட்பணி சார்லஸ் விஜு மறையுரை ஆற்றினார். பகல் 12 மணிக்கு சிறப்பு தேர்ப்பவனி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். மாலை 7 மணிக் தேர் திருப்பலி நடந்தது. விழாவை பங்கு பேரவையினர் சிறப்பித்தனர்.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப் அருள் ஸ்டாலின், இணை பங்குத்தந்தை அன்ஸ்வெல் ராலிஸ்ட், ஆன்மீக தந்தை பணிவன்பன் வின்சென்ட், பங்குப்பேரவை துணைத்தலைவர் கிளாட்சன், செயலாளர் மிக்கேல் தேவசகாயம், துணை செயலாளர் ஜெயமேரி, பொருளாளர் ஜார்ஜ் சகாய ஜோஸ், அருட்கோதரிகள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: