புதுச்சேரி: புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு குற்றவாளிக்கு நாளை தண்டனை அறிவிக்கப்படும் என போக்சோ விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2024 ஆண்டு மார்ச் 2ம் தேதி வீட்டின் அருகே விளையாடிய சிறுமி மாயமானார். அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கழிவு நீர் வாய்க்காலில் வீசி இருந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து கருணா (எ) கருணாஸ் (18), விவேகானந்தன் (56) ஆகிய இருவரை கைது செய்தனர்.
இதனிடையே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் கடந்த 2024 செப்டம்பர் 16ம்தேதி கழிப்பறை அருகே உள்ள இரும்பு கம்பியில், துணியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட கருணாஸ் குற்றவாளி என அறிவித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று காலை 11.30 மணிக்கு இறுதிகட்ட வாதம் நடைபெற்றது. தொடர்ந்து இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி சுமதி, குற்றவாளிக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என கூறி ஒத்தி வைத்தார்.
