×

சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி: புதுவை காங்., தலைவர் பதவி வைத்திலிங்கம் ராஜினாமா

 

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால், தார்மீக பொறுப்பேற்று காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்தார். புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்.9ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ்-16, திமுக-13, விசிக-1 என தொகுதி பங்கீடு செய்யப்பட்டது. ஆனால், திமுக, விசிக போட்டியிட்ட 6 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறாமல் போட்டியிட்டனர். இது கூட்டணி கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதுடன் ஆளும் கட்சிக்கு சாதகமாக அமைந்தது.

இதனால் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 16 இடங்களில் ஒரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை வைத்திலிங்கம் எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் என்று மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நேற்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து, வைத்திலிங்கம் எம்பி தனது மாநில தலைவர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Tags : Vaithilingam ,Puducherry ,Congress ,Puducherry assembly elections ,-16 ,India alliance ,
× RELATED 2027 உ.பி. பேரவைத் தேர்தலுக்காக I-PAC...