சேலம்: நான் கழுதை மேய்க்கும் பணியில் ரெம்ப பிஸியாக இருப்பதாக சமூகவலைதளத்தில் முன்னாள் பாமக எம்எல்ஏ அருள் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளநிலையில், இத்தேர்தலில் ராமதாஸ் அணியில் சேலம் மேற்கு தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த அருள் போட்டியிட்டார். அவருக்கு எதிராக திமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜியும், அதிமுக கூட்டணியில் பாமக (அன்புமணி தரப்பு) வேட்பாளராக கார்த்தியும், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் லட்சுமணனும் களம் கண்டனர்.
இதில், தவெக வேட்பாளர் லட்சுமணன் வெற்றி பெற்று, எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார். 12,391 வாக்குகளை மட்டுமே அருள் பெற்று 4வதுஇடத்திற்கு தள்ளப்பட்டார். சேலம் மேற்கு தொகுதியில் தோல்வியை தழுவிய நிலையில், தனது சொந்த வேலைக்கு மாஜி எம்எல்ஏ அருள் திரும்பியுள்ளார். இவர் நேற்றிரவு, தனது பேஸ்புக் சமூகவலைதள பக்கத்தில் மாடு, குதிரை, கழுதை ஆகியவைகளுடன் இருக்கும் 4 புகைப்படங்களுடன் ஒரு பதிவை போட்டுள்ளார், அதில், நம்ம வேலைய பாக்க நம்ம தோட்டத்தில் மாடு, எருமை, குதிரை, புதிதாக பிறந்த கழுதை… மேய்க்கும் பணியில் நா ரொம்ப பிசி,’’ எனக்கூறியுள்ளார்.
தேர்தலில் தோற்றநிலையில், மாடு, கழுதை மேய்க்கும் பணிக்கு சென்றுவிட்டேன் என அவரே கூறிய இத்தகவல், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
