×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது

 

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றது. வலுவான எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது. இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் எதிர்க்கட்சித் தலைவர் யார்? என்பது குறித்து இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. எதிர்க்கட்சி தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட போகிறார்கள் என்ற பரபரப்பு தற்போது திமுகவினரிடையே நிலவியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்கத் திமுக இடையூறு செய்யாது என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சட்டசபையில் திமுகவின் குரலாக ஒலிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

Tags : Thimuka M. L. A. ,Chennai ,Dimuka Coalition ,Tamil Nadu Legislative Assembly ,Dima ,
× RELATED சைலன்ட் மோட்-ல் விசில்.!! இதுவே...