×

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் முழுவதும் விலக்கிக் கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவிப்பு

டெல்லி: தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசு புதிய திட்டங்களை அறிவிக்கவும், வழக்கமான நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் இனி எந்தத் தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த ஏப்.23 ல் நடைபெற்றது. இதற்கான அறிவிப்பு, மார்ச் 15ல் வெளியானது. அப்போது முதலே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் நடைபெற்றன. வி.ஏ.ஓ.க்கள் முதல், தாசில்தார்கள், துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகள், கலெக்டர் வரையிலான வருவாய்த்துறையினர் மற்றும் அனைத்து அரசு துறையினரும் வழக்கமான பணிகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, முழு வீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.

தொகுதிவாரியாக ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்துவது, வேட்பு மனுக்கள் பெறுவது, பரிசீலனை செய்வது, தேர்தல் பொருட்கள், படிவங்களை தருவித்து, அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பிவைப்பது, இ.வி.எம், மெஷின்களை தயார்படுத்துவது, வாக்காளர் மத்தியில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. ஓட்டுப்பதிவு நாள் பணிகள் என. இரவு பகல் பாராமல், விடுப்பு இன்றி தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கும், இடைத்தேர்தல் நடைபெற்ற குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட இதர மாநிலத் தொகுதிகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதால், புதிய நலத்திட்டங்களை அறிவித்தல், இடமாற்றம் போன்ற அரசு நிர்வாகப் பணிகள் இனி வழக்கம்போல மேற்கொள்ளப்படும்.

பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் ஏற்கனவே திரும்பப் பெறப்பட்டுள்ளன. மேலும், பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளும் இனி நடைமுறையில் இருக்காது. வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

 

 

Tags : Electoral Commission ,Delhi ,Election Commission ,Tamil Nadu ,Kerala ,Assam ,West Bengal ,Puducherry ,
× RELATED மேற்கு வங்க தேர்தல் முடிவுகளுக்கு...