×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியை நினைத்து வருந்திய EPS..! புதுவை அதிமுக மாநில செயலாளர் தகவல்

புதுவை: தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்க நிலையில், அரசியல் களம் எதிர்பார்த்ததை விட மிகவும் பரபரப்பாக காணப்டுகிறது. அதிக இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சியமைக்க போதுமான ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் இல்லாத காரணத்தால் தவெக தவித்து வருகிறது.

இந்த சூழலில் புதுவையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு புதுச்சேரியின் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பதில் அளித்தார். அப்போது ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது அதிமுக, திமுக கட்சிகள் என சேர்த்து பதில் கூற முற்பட்டார். இடையில் குறுக்கிட்ட செய்தியாளர் நீங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் பெயரை மட்டும் கூறாமல், உங்களுக்கு எதிரி கட்சியாக இருக்கும் திமுக-வின் பெயரையும் சேர்த்து சொல்கிறீர்களே என கேள்வி எழுப்பினார்.

உடனே கோபப்பட்ட அன்பழகன் என்ன கேள்வி இது.? திமுக-வும் ஒரு அரசியல் கட்சி தானே.. அதுவும் பல ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட அரசியல் கட்சி தானே.. 70 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்காக உழைத்து கொண்டிருக்கும் கட்சி தானே திமுக.. அந்த கட்சியை காரணமே இல்லாமல் கேவலப்படுத்தியா இப்போது பேச முடியும், அது முடியாது.

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு கூட எங்கள் கட்சி தலைவர் எடப்பாடியார் உள்ளபடியே மிகவும் வருந்தினார். இது உண்மை, நான் அவரை நேரில் பார்க்கும் போது நம் கட்சி நிலை தேர்தலில் இப்படியாகிவிட்டதே, மனதெல்லாம் கஷ்டமாக இருக்கிறது என்றேன். அதற்கு விடுங்கள் பார்த்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு, அப்போது என்னிடம் ஒரு வார்த்தை சொன்னார் ” ஸ்டாலின் எல்லாம் எப்பேர்ப்பட்ட லீடர், அவரே வெற்றி வாய்ப்பை இழக்கும் அளவிற்கு மக்கள் ஓட்டு போடுகிறார்கள் என்றால் என்ன இது..இந்த மக்கள் என்ன தான் நினைக்கிறார்கள் என்று கேட்டுவிட்டு மனதார வருந்தினார். அரசியல் ரீதியாக எதிரிகளாக இருந்தாலும், நீண்ட கால அனுபவமுள்ள ஒரு தலைவர் தோல்வியடைந்தது வருத்தமளிக்கிறது என்று EPS தம்மிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.

அரசியலில் இருவரும் வெவ்வேறு துருவங்களாக இருந்தாலும் மிகசிறந்த மற்றும் பெரிய அரசியல் தலைவர்கள் எல்லாம் வெற்றி பெற வேண்டும், அவர்களுக்கு இந்த நிலை வர கூடாது என்று வருத்தப்பட்டு பேசினார். இப்படிப்பட்ட தலைமைப்பண்பு உள்ளவர் தான் எங்கள் தலைவர் எடப்பாடியார் என்று கூறினார் .

Tags : Dimuka Dhawar ,Stalin ,Secretary of State ,New Kingdom ,Tamil Nadu Assembly ,
× RELATED ஆந்திராவில் 51 அரசு மருத்துவக் கல்லூரி...