- திரிணாமுல் காங்கிரஸ்
- நீதிமன்றம்
- மேற்கு
- மேற்கு வங்கம்
- திரிணாமூல் காங்கிரஸ்
- உச்ச நீதிமன்றம்
- வங்கம்
- மம்தா பானர்ஜி
- மேற்கு முதலமைச்சர்
- குடியரசுத் தலைவர்
மேற்குவங்கம்: மேற்கு வங்க தேர்தல் முடிவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மேற்குவங்க முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த மம்தா பானர்ஜி, “அவர்கள் என்னை பதவிநீக்கம் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தட்டும் என்றும் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்து தேர்தலை பாஜக கொள்ளையடித்துவிட்டதாக குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் கூறியுள்ளார். .
பாஜக மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் இணைந்து தேர்தலில் முறைகேடு (Rigging) செய்ததாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் முடிவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாகவும், தானும் தனது அமைச்சரவை சகா சந்திரிமா பட்டாச்சார்யாவும் வழக்கறிஞர்களாக மீண்டும் பணியாற்றி இந்த வழக்கை நேரில் நடத்தப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் முறையில் முறைகேடுகள் நடந்ததாகவும், குறிப்பாக 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றியை “திருடியுள்ளதாகவும்” மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மக்களின் தீர்ப்பால் தான் தோற்கவில்லை என்றும், ஒரு சதித் திட்டத்தாலேயே தனது கட்சி தோற்கடிக்கப்பட்டதாகவும் கூறி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய அவர் மறுத்துவிட்டார்.
இதற்கிடையில், மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரி மாநில ஆளுநரிடம் தேர்தல் முடிவுகளுக்கான அரசிதழ் அறிவிப்பைச் சமர்ப்பித்துள்ளார். இதன் மூலம் மாநிலத்தில் பாஜக புதிய அரசை அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, வாக்கு எண்ணும் பணியில் மத்திய அரசு ஊழியர்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது
