×

26-31 தேதிகளில் பிளேஆப் சுற்றுகள் அகமதாபாத் நகரில் ஐபிஎல் இறுதி போட்டி: பிசிசிஐ அறிவிப்பு

 

மும்பை: ஐபிஎல் பிளேஆப் சுற்றுகள் நடக்கும் இடங்கள், தேதிகள் பற்றிய அறிவிப்பை பிசிசிஐ நேற்று வெளியிட்டுள்ளது. ஐபிஎல் லீக் சுற்றுகளில் 70 போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகள் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகின்றன. அதையடுத்து, பிளே ஆப் சுற்றுகள் நடைபெற உள்ளன. அது தொடர்பான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று வெளியிட்டது. பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் வரும் 26ம் தேதி துவங்கி, இறுதிப் போட்டி வரும் 31ம் தேதி நடைபெற உள்ளது.

கடந்தாண்டு ஐபிஎல்லில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சொந்த ஊரான பெங்களூருவில் இறுதிப் போட்டி நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இறுதிப் போட்டி, வரும் 31ம் தேதி அகமதாபாத் நகரில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு கிரிக்கெட் சங்கம் மற்றும் பெங்களூரு மாநகர நிர்வாகம் கூறியுள்ள சில நிபந்தனைகள், பிசிசிஐ விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதால், இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

Tags : IPL ,Ahmedabad ,BCCI ,Mumbai ,
× RELATED ஐபிஎல்2026: பஞ்சாப் அணிக்கு எதிரான...