×

சர்வதேச அணிகள் பங்கேற்கும் போட்டிகளுக்கு விலக்கு; இந்தியா-பாக். விளையாட்டுகள் மீதான தடை தொடர்கிறது: ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு

 

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் இடையிலான இரு தரப்பு விளையாட்டுகள் மீதான தடை உத்தரவு தொடர்வதாக ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான விளையாட்டு போட்டிகள் மீது, கடந்தாண்டு ஆகஸ்டில் தடை விதிக்கப்பட்டது. அந்த தடை உத்தரவு தொடரும். அதேசமயம், பன்னாட்டு அணிகள் மோதும் போட்டிகளுக்கு இந்த தடை உத்தரவில் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்தியாவில் நடைபெறும் பன்னாட்டு விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து வரும் விளையாட்டு வீரர்கள் தடுக்கப்பட மாட்டார்கள்.

பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள், அணிகளின் அதிகாரிகள், தொழில்நுட்ப ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்தியாவில் நடைபெறும் பன்னாட்டு விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான விசா நடைமுறைகள் எளிதாக்கப்படும். அதேபோல், பன்னாட்டு அணிகள் பங்கேற்கும் போட்டிகளில் பாகிஸ்தான் அணிகளுடன் நடக்கும் போட்டிகளில் இந்திய அணிகள், தனிப்பட்ட இந்திய வீரர்கள் மோதுவதில் தடை இருக்காது. சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு உகந்த, விரும்பப்படும் நாடாக இந்தியாவை நிலைநிறுத்த தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச விளையாட்டுகளை நிர்வகிக்கும் அமைப்புகளின் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு இந்தியாவுக்கு அடிக்கடி வந்து செல்லும் வகையிலான மல்டி என்ட்ரி விசாக்கள், முன்னுரிமை அடிப்படையில், அதிகட்சம் 5 ஆண்டுகள் வரை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : India ,Pakistan ,Union Sports Ministry ,New Delhi ,Pakistan… ,
× RELATED ஐபிஎல்2026: பஞ்சாப் அணிக்கு எதிரான...