- பிசிசிஐ
- 2026 ஐபிஎல் தொடர்
- நரேந்திர மோடி அரங்கம்
- அகமதாபாத்
- மும்பை
- ஐபிஎல்
- அகமதாபாத், குஜராத்
- தர்மசாலா ஸ்டேடியம்
மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் முதல் குவாலிஃபையர் போட்டி(மே 26) தர்மசாலா மைதானத்திலும், எலிமினேட்டர் (மே 27 ) மற்றும் குவாலிஃபையர் 2(மே 29) போட்டிகள் முல்லன்பூர் மைதானத்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிசிசிஐ தெரிவித்துள்ளதாவது; “இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐபிஎல் 2026 தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது. விறுவிறுப்பான 70 லீக் போட்டிகளுக்குப் பிறகு, புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மோதும் ‘குவாலிஃபையர் 1’ போட்டி மே 26-ஆம் தேதி தர்மசாலாவில் உள்ள HPCA மைதானத்தில் நடைபெறும். இதனைத் தொடர்ந்து, மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இடையிலான ‘எலிமினேட்டர்’ போட்டி மே 27-ஆம் தேதியும், அதில் வெற்றி பெறும் அணி குவாலிஃபையர் 1-இல் தோல்வியடைந்த அணியுடன் மோதும் ‘குவாலிஃபையர் 2’ போட்டி மே 29-ஆம் தேதியும் சண்டிகரில் உள்ள புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
இந்த ஆண்டின் பிரம்மாண்ட இறுதிப்போட்டி மே 31-ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக, பெங்களூருவில் இறுதிப்போட்டியை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், உள்ளூர் சங்கம் மற்றும் அதிகாரிகளின் சில கோரிக்கைகள் பிசிசிஐ-யின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அமையாத காரணத்தால், ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இறுதிப்போட்டி அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
