×

ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் திருஷ்டி செயற்கைகோள் ஏவி இந்திய ஸ்டார்ட்அப் சாதனை: பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவமான கேலக்சிஐ உலகின் முதல் ஆப்டோ எஸ்ஏஆர் செற்கைகோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவி சாதனை படைத்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த கேலக்சிஐ விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், திருஷ்டி செயற்கைகோள் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வான்கார்ட் விண்வெளி தளத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதாக கூறி உள்ளது.

ஒரே தளத்தில் எலக்ட்ரோ ஆப்டிகல் மற்றும் செயற்கை அபெர்சர் ரேடார் ஆகிய 2 சென்சார்களையும் இணைத்த உலகின் முதல் செயற்கைகோள் இது. இரு சென்சார்களும் ஒரே இடத்தில் இருப்பதால் மேகமூட்டம், இருள், மோசமான வானிலை என எத்தகைய சூழலிலும் பூமியை துல்லியமாக படம் பிடிக்க முடியும். இந்த புவி கண்காணிப்பு செயற்கைகோள் பாதுகாப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை மற்றும் கடல்சார் கண்காணிப்பு போன்ற பல்வேறு துறைகளுக்கு தேவையான தரவுகளை வழங்கும். திருஷ்டி செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு பிரதமர் மோடி மற்றும் இஸ்ரோ உள்ளிட்ட அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

Tags : SpaceX ,PM Modi ,New Delhi ,Bengaluru ,Galaxy ,Vanguard ,California, USA ,
× RELATED புதுச்சேரியில் ஆட்சியை பிடிப்பது யார்? 2 கட்டமாக இன்று வாக்கு எண்ணிக்கை