×

மகளிர் உலக கோப்பை டி20 ஹர்மன்பிரீத் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு

மும்பை: உலகக் கோப்பை மகளிர் டி20 போட்டிகள், வரும் ஜூன் 12ம் தேதி முதல் இங்கிலாந்தில் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. அதில், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிகஸ், பார்தி ஃபுல்மாலி, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஸ்ரீசரணி, யாஸ்திகா பாட்டியா, நந்தினி சர்மா, அருந்ததி ரெட்டி, ரேணுகா தாக்குர், கிரந்தி கவுட், ஷ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ் ஆகிய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்தில் வரும் ஜூலையில் அந்நாட்டு மகளிர் அணியுடன் இந்திய மகளிர் அணி டெஸ்ட் போட்டியில் ஆடவுள்ளது. அதற்கான அணியில், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிகஸ், பிரதிகா ராவல், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஸ்ரீசரணி, யாஸ்திகா பாட்டியா, நந்தனி சர்மா, ஹர்லீன் தியோல், ரேணுகா தாக்குர் கிரந்தி கவுட், ஷாயாலி சத்கரீ, ஸ்நேஹ் ராணா ஆகியோர் உள்ளனர்.

Tags : Women's World Cup T20 ,Harmanpreet ,Mumbai ,England ,Harmanpreet Kaur ,Smriti Mandhana… ,
× RELATED ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள்;...