மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய குஜராத் அணி 19.1 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 57 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 40* ரன்களும் எடுத்தனர்.
