×

மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி அபார வெற்றி

சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 44வது போட்டி சென்னை, சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் திடலில் நேற்று நடந்தது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதையடுத்து அந்த அணியின் துவக்க வீரர்களாக வில் ஜாக்ஸ், ரையான் ரிக்கெல்டன் களமிறங்கினர்.

அன்சுல் கம்போஜ் வீசிய 2வது ஓவரில் வில் ஜாக்ஸ் (1 ரன்) ராமகிருஷ்ணா கோஷிடம் கேட்ச் தந்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரையான் ரிக்கெல்டன் (24 பந்து, 5 பவுண்டரி, 37 ரன்), நூர் அகமது வீசிய பந்தில் உர்வில் படேலிடம் கேட்ச் தந்து வெளியேறினார். சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியுடன் பந்து வீசியதால் மும்பை அணி வீரர்கள் தடுமாற்றத்துடன் ஆடினர்.

அதனால் ரன் வேகம் கணிசமாக குறைந்தது. ராமகிருஷ்ணா கோஷ் வீசிய 11வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் (21 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து நூர் அஹமது வீசிய 13வது ஓவரில் திலக் வர்மா 5 ரன்னில் அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நமன் திர் (37 பந்து, 57 ரன்), ஜேமி ஓவர்டன் வீசிய 17வது ஒவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து ராபின் மின்ஸ் (5 ரன்), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (18 ரன்) அவுட்டாகினர். 20 ஓவர் முடிவில் மும்பை அணி, 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்தது.

சென்னை தரப்பில் அன்சுல் கம்போஜ் 3, நூர் அஹமது 2, ராமகிருஷ்ணா கோஷ், ஜேமி ஓவர்டன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. இதையடுத்து அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Tags : Chennai ,Mumbai ,Mumbai Indians ,IPL ,MA Chidambaram Stadium ,Chepauk, Chennai ,Chennai Super Kings ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி..!