×

மருத்துவ மாணவர்கள் மனநல ஆலோசனை பெற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு

சென்னை: மருத்துவ பட்டப்படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நாளை (3.5.2026) நடைபெற உள்ளது. மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் ‘நட்புடன் உங்களோடு’ திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே, ‘டெலி கவுன்சலிங்’ தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை தவறாமல் பெற்றுக் கொள்ளலாம். 24 மணி நேரமும் பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu government ,
× RELATED 200 கி.மீ சுற்றளவில் கண்காணிக்கும்...