சென்னை: மே 4ம் தேதி வெற்றிச் செய்தி வரும். மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவார் என்று பிரேமலதா கூறினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உலக உழைப்பாளர்கள் தினமான மே தினம் நேற்று கொண்டாடப்பட்டது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, விஜயகாந்த் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.தொடர்ந்து பிரேமலதா அளித்த பேட்டி: கருத்துக்கணிப்பை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் ஆக்கப்பொறுத்தவர்கள் ஆறப்பொறுங்கள். எல்லாம் முடிந்து இருக்கிறது. இன்னும் 2 நாள்தான் இருக்கு. மே 4ம் தேதி வெற்றிச் செய்தி வரும். எல்லோருக்கும் நல்லதே நடக்கும். எங்கள் மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணி அமோக வெற்றி பெறும். அண்ணன் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவார். நாங்கள் (தேமுதிக) 10 பேர் போட்டியிட்டுள்ளோம். கேப்டன் ஆசீர்வாதத்துடன் 10 பேரும் சட்டசபைக்கு செல்வோம். எல்லோரும் வாழ்த்தினாலும் தேமுதிக தான், திட்டினாலும் தேமுதிக தான். பழுத்தமரம் தான் கல்லடி படும் என்ற விமர்சனங்களுக்கு மே 4ம் தேதி பதில் கொடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மே 4ம் தேதி வெற்றிச்செய்தி வரும் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவார்: பிரேமலதா பேட்டி
- கே. ஸ்டாலின்
- பிரேமலதா
- சென்னை
- எம். கே. பிரேமலதா
- ஸ்டாலின்
- உலக தொழிலாளர் தினம்
- டெமுட்டிகா தலைமை அலுவலகம்
- கோயம்பேட்டை, சென்னை
- தெமுட்டிகா ஜெனரல் செயலாளர்
