வடசென்னை அனல் மின் நிலையத்தில் 1200 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த, அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள 3 நிலைகளில், முதல் நிலையில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது நிலையில் உள்ள முதல் அலகில் 600 வீதம் 1200 என 1830 மெகாவாட் மின் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று 2வது நிலையின் 1வது அலகில் கொதிகலன் கசிவு காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தியும், ஏற்கனவே 2வது அலகில் தொழில்நுட்ப பிரிவில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் அனல்மின் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதால், விரைவில் மின் உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: