×

10 நாள்களுக்குள் 2வது சம்பவம் காரக்பூர் ஐஐடி விடுதியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை

கொல்கத்தா: மேற்குவங்கம் காரக்பூரில் உள்ள ஐஐடியில் படித்து வந்த மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேற்குவங்க மாநிலம் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப கழகம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இவர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாக நீடிக்கிறது. இங்கு அகமதாபாத்தை சேர்ந்த ஜெய்பீர் சிங் தோடியா(21) என்ற மாணவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார். இவர் கடந்த 18ம் தேதி தான் தங்கியிருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் இல்லத்தின் 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சோஹம் ஹல்தார் என்ற 22 வயது மாணவர் ஐஐடி காரக்பூரில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் எம்டெக் பயின்று வந்தார். இவர் நேற்று காலை தான் தங்கியிருந்த பண்டிட் மதன் மோகன் மாளவியா விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மாணவரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மாணவரின் மரணம் குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாள்களுக்குள் 2வதாக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags : IIT ,Kharagpur ,Kolkata ,IIT Kharagpur ,West Bengal ,Indian Institute of Technology ,Kharagpur, West Bengal ,
× RELATED திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய...