×

தலையிட வேண்டிய அவசியமில்லை வெறுப்பு பேச்சுக்களை தடுக்க போதுமான சட்டங்கள் உள்ளன: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த 2021ம் ஆண்டிலிருந்து விசாரிக்கப்படும் இந்த வழக்கில் விவாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த ஜனவரி 20ம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று அளித்த தீர்ப்பு: வெறுப்பு பேச்சுக்களை கையாள இபிகோ மற்றும் புதிய சட்டமான பிஎன்எஸ் ஆகியவற்றில் போதுமான சட்டப் பிரிவுகள் உள்ளன. எனவே நீதிமன்றம் தலையிட்டு புதிய வழிகாட்டுதல்களை வழங்கும் அளவுக்கு எந்தவொரு சட்ட வெற்றிடமும் இல்லை. இந்த விவகாரத்தில் சட்டம் பிரச்னையல்ல, இருக்கின்ற சட்டத்தை சரியாக அமல்படுத்தாததே பிரச்னை. காவல்துறை அதிகாரிகள் புகாருக்கு காத்திருக்காமல் வெறுப்பு பேச்சுக்கள் நடந்தால் தாமாக முன்வந்து வழக்கு பதிய வேண்டும். இது காவல்துறையின் கடமை. நீதிமன்றங்கள் புதிய சட்டங்களை உருவாக்க முடியாது. வெறுப்பு பேச்சுக்களும், வதந்திகளும் சமூகத்தின் சகோதரத்துவம், கண்ணியம் மற்றும் அரசியலமைப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Supreme Court ,New Delhi ,
× RELATED திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய...