×

நாகப்பட்டினம் அருகே கடலில் மிதந்து வந்த மிதவை கடலோர காவல்படை விசாரணை

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே சாமந்தான்பேட்டை கடற்கரையில் கப்பலில் பயன்படுத்தப்படும் மிதவை ஒன்று மிதந்து வந்தது. இதை கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரக்கு கப்பல் போக்குவரத்து அதிகம் உள்ள கடல் பகுதிகளில் துறைமுகம் உள்ளே கப்பல் சென்று வர வழிகாட்டும் விதமாக மிதவையை கடலில் ஆங்காங்கே மிதக்க விடுவது வழக்கம். இந்நிலையில், நாகப்பட்டினம் அருகே சாமந்தான்பேட்டை கடற்கரை பகுதி கடலில் சிகப்பு நிறம் கொண்ட கோள வடிவத்தில் கப்பலில் பயன்படுத்தப்படும் மிதவை ஒன்று மிதந்தது. இதை பார்த்த மீனவர்கள் நாகூர் கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராணியிடம் நேற்று தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கடலோர காவல் குழும போலீசார் சென்று மிதவையை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Coast Guard ,Nagapattinam ,Samanthanpettai beach ,
× RELATED விளைச்சல் இருந்தும் விற்பனைக்கு...