×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80.65 அடி

மேட்டூர்: தமிழக- கர்நாடக எல்லையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று 5வது நாளாக நீர்வரத்து 1,500 கனஅடியாக நீடிக்கிறது. இதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று 2வது நாளாக நீர்வரத்து 1087 கனஅடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. வரத்தை காட்டிலும் நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், நேற்று முன்தினம் 80.71 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை 80.65 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 42.60 டிஎம்சியாக உள்ளது.

Tags : Mettur ,Cauvery ,Tamil Nadu-Karnataka ,Hogenakkal Cauvery ,
× RELATED விளைச்சல் இருந்தும் விற்பனைக்கு...