தேர்தல் ஆணைய எச்சரிக்கையை மீறி வாக்களித்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட தவெக நிர்வாகி

சென்னை: வாக்கு செலுத்தியதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட தவெக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்போன் எடுத்துச்செல்வது, மின்னணு வாக்குப்பதிவை புகைப்படம் எடுப்பது குற்றம் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இதை மீறினால் 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, தவெக வேட்பாளருக்கு வாக்களித்த நிர்வாகி, விவி பேட்டில் சின்னம் தென்படுவதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது வைரலானது. தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை மீறி வாக்குப்பதிவு மையத்திற்கு செல்போன் எடுத்து சென்று, புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: