×

வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தை ஆய்வு செய்தார் கடலூர் ஆட்சியர்

 

கடலூர்: பண்ருட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்ற வாக்குப்பதிவிற்குப் பிறகு, வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட மையத்திற்கு கொண்டு வரப்பட்டன. இந்த நிலையில், நேற்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் வந்து வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தை ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக விசாரித்தார்.

Tags : Cuddalore ,Panruti ,Anna University ,
× RELATED அசோக் நகரில் வாக்காளரின் ஓட்டு...