×

தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1,000 கோடியை தாண்டியது

சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை: வன்முறையற்ற, மிரட்டல்களற்ற மற்றும் தூண்டுதல்களற்ற தேர்தல்களை உறுதி செய்ய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. புகார்கள் மீது 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய இரு மாநிலங்களிலும் 5,011-க்கும் மேற்பட்ட மேற்கு வங்கத்தில் 2,728 மற்றும் தமிழ்நாட்டில் 2,283) பறக்கும் படைகள் பணியமர்த்தப்பட்டுள்ளன. இது தவிர, வெவ்வேறு இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ள 5,363-க்கும் மேற்பட்ட மேற்கு வங்கத்தில் 3,142 மற்றும் தமிழ்நாட்டில் 2,221 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன. பிப்ரவரி 26ம் தேதியன்று தேர்தல் பறிமுதல் மேலாண்மை அமைப்பு செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து, ஏப்ரல் 22ம் தேதி வரையிலான தரவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி மேற்கு வங்காளத்தில் ரொக்கமாக ரூ.27.48 கோடியும், மதுபானம் 39,31,463 லிட்டர், மதுபான மதிப்பு ரூ.102.45 கோடியும், போதைப்பொருள் மதிப்பு ரூ.108.11 கோடியும், விலை உயர்ந்த உலோகங்கள் ரூ.55.88 கோடியும், இலவசங்கள் இதர பொருட்கள் ரூ.178.83 கோடி என மொத்தம் ரூ.472.89 கோடியும், தமிழ்நாட்டில் ரொக்கம் ரூ.100.19 கோடியும், மதுபானம் 1,17,713 லிட்டர், மதுபான மதிப்பு 3.85 கோடி, போதைப்பொருள் மதிப்பு 76.72 கோடி, விலை உயர்ந்த உலோகங்கள் 159.31 கோடி, இலவசங்கள் இதர பொருட்கள் ரூ.259.14 கோடி என மொத்தம் ரூ.599.24, கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

அதன்படி மொத்தம் ரொக்கம் ரூ.127.67 கோடி, மதுபானம் 40,49,176 லிட்டர், மதுபான மதிப்பு ரூ.106.3 கோடியும், போதைப்பொருள் மதிப்பு ரூ.184.83 கோடி, விலை உயர்ந்த உலோகங்கள் ரூ.215.19 கோடி, இலவசங்கள் இதர பொருட்கள் ரூ.437.97 கோடி என மொத்தம் ரூ.1072.13 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் சோதனைகள் மற்றும் ஆய்வுகளின் போது சாதாரண குடிமக்கள் எவ்வித சிரமத்திற்கும் அல்லது துன்புறுத்தலுக்கும் உள்ளாகக் கூடாது என்பதை அமலாக்கத் துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது. குடிமக்கள், அரசியல் கட்சிகள் மாதிரி நடத்தை விதி மீறல்கள் குறித்து ECINET-ல் உள்ள C-Vigil Module மூலம் புகார் செய்யலாம். இவ்வாறு தேர்தல் ஆணையஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,West ,Bengal ,Chennai ,Election Commission of India ,West Bengal… ,
× RELATED 18 தொகுதியிலும் அன்புமணிக்கு கொடுக்கிற...