×

சட்டமன்ற தேர்தலையொட்டி ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை: மூன்று மடங்கு வரை அடாவடி வசூல் வேட்டை; நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை

சென்னை: சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் அடாவடியாக வசூலிக்கப்படுவதாகவும், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தலில் வாக்களிக்க சென்னையில் இருந்து பலர், சொந்த ஊர்களுக்கு கடந்த 21ம் தேதி முதல் படையெடுத்து சென்றனர். சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்ய முடி​யாத பலர் ஆம்னி பேருந்துகளை நாடி செல்லும் நிலை ஏற்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்தி சில ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் பயணிகளிடம் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்​னை​யில் இருந்து மதுரை, கோவை, சேலம், திருச்​சி, நெல்லை மற்​றும் நாகர்​கோ​வில் போன்ற முக்​கிய நகரங்​களுக்கு செல்​லும் ஆம்னி பஸ் கட்​ட​ணம் வழக்​கத்​தை​விட 3 மடங்கு அடாவடியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தேர்​தல் என்​பது ஜனநாயக கடமை. அதை நிறைவேற்ற செல்​வோரிடம் இவ்​வாறு அதிக கட்​ட​ணம் வசூலிப்​பதை என்ன என்று சொல்​வது என பயணிகள் ஆதங்​கத்தை வெளிப்​படுத்​துகின்​றனர்​. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே, அதிக வசூலில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் சிறைப்பிடிக்கப்படுவதுடன் அவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து இதுபோன்ற விதிமுறை மீறல்களை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சிலர் மீறி நடத்தி வருவது தொடர்கதையாகி வருகின்றன.

வழித்தடம் சாதாரண கட்டணம் அடாவடி வசூல்
சென்னை – மதுரை ரூ.1,200 – ரூ. 1,400 ரூ.3500 – ரூ. 4,200
சென்னை – நெல்லை ரூ.1,400 – ரூ. 1,650 ரூ.3,500 – ரூ.4,500
சென்னை – திருச்சி ரூ.1,500 – ரூ.1700 ரூ.3,100 – ரூ.4000
சென்னை – தூத்துக்குடி ரூ.1,700 – ரூ.1,900 ரூ.3,700 -ரூ.4500

புகார் எண்கள்
போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்டுள்ள புகார் எண்கள்
விவரம் பின்வருமாறு:
* கட்டுப்பாட்டு அறை (சென்னை) 1800 425 6151
* சென்னை (வடக்கு) 99442 53404
* சென்னை (தெற்கு) 97905 50052
* விழுப்புரம் 9677398825
* வேலூர் 9840023011
* ஈரோடு 8056940040
* கோவை 91235 93971
* மதுரை 90953 66394
* திருச்சி 90660 32343
* சேலம் 78456 36423
* நெல்லை 96981 18011
* விருதுநகர் 9025723800

Tags : Omni buses ,Chennai ,
× RELATED 18 தொகுதியிலும் அன்புமணிக்கு கொடுக்கிற...