சென்னை அணி வீரர் ஆயுஷ் மாத்ரே விலகல்

சென்னை: நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் இளம் அதிரடி வீரான ஆயுஷ் மாத்ரே, கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்தபோது இடது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் கடும் அவதியடைந்தார். பிறகு அடுத்த சில பந்துகளில் தாக்குபிடிக்க முடியாமல் அவுட்டாகி வெளியேறினார். அவரை மருத்துவக்குழுவினர் பரிசோதித்ததில், இடது தொடை தசைநார் பகுதி கிழிந்து பலத்த காயமடைந்திருப்பது தெரிந்தது. தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ள ஆயுஷ் மாத்ரே, குணமடைய 6 முதல் 12 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐபிஎல் தொடரில் இருந்து ஆயுஷ் மாத்ரே விலகியுள்ளார். இதுவரை தான் ஆடிய 6 ஆட்டங்களில் 177 ஸ்ரைக் ரேட் வைத்துள்ள அவர், சிஎஸ்கே அணியில் இருந்து விலகியிருப்பது அந்த அணிக்கு பெரும் இழப்பாகும். ஏற்கனவே காலில் ஏற்பட்ட காயத்திற்காக மகேந்திரசிங் டோனி களமிறங்காதநிலையில், மற்றொரு முன்னணி வீரர் விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: